Friday, July 06, 2007

அல்லாஹ்வின் விரோதிகளுக்காக நாம் பிரார்த்திக்கலாமா?

'இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் ஜனங்களை நோக்கி, 'நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும், உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது' என்று கூறினார்கள். அன்றி இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி 'அல்லாஹ்விடத்தில் உமக்காக யாதொன்றையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்புக் கேட்பேன்' என்று கூறி 'எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்மீதே நாங்கள் பாரம் சாட்டினோம். உன்னிடமே (நாங்கள் யாவரும்) வரவேண்டியதிருக்கிறது. எங்கள் இறைவனே! நீ எங்களை நிராகரிப்போரின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானமுடையவன்' என்று பிரார்த்தித்தார்' (அல்குர்ஆன்: 60:4-5)

"இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம் அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே அல்லாது வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்று தெளிவாகத் தெரிந்ததும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக்க இரக்கமும், அடக்கமும் உடையோராக இருந்தார்". (அல்குர்ஆன்: 9:114)

"இணைவைத்து வணங்குவோருக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் சரியே. அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்குத் தெளிவான பின்னரும் (இது தகுமானதல்ல)". (அல்குர்ஆன்: 9:113)

"எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய்-தந்தைக்கும், மற்ற மூஃமின்களுக்கும் கேள்விக்-கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!..." (என இப்ராஹீம் நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்) (அல்குர்ஆன்: 14:41)

"மனிதர்களை அவர்கள் தேடிக்கொண்ட தீவினைக்காக உடனுக்குடன் அல்லாஹ் தண்டிப்பதாக இருப்பின் பூமியில் எந்த ஜீவனையும் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் அவர்களைக் குறிப்பிட்ட தவணை வரையிலும் பிற்படுத்துகிறான்..." (அல்குர்ஆன்: 35:45)