Monday, March 07, 2005

உலக வாழ்வில் நெருங்கிய நண்பன்.

43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

43:38. எதுவரை என்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும் போது (ஷைத்தானிடம்): "ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!" (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்" என்று கூறுவான்.

43:39. (அப்போது) "நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

43:40. ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?