Tuesday, March 13, 2007

விடியற்காலையில் வந்த இறை வேதனை எதனால்?

11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் (இறைதூதர்) வந்த போது (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார். (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக "இதுநெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார்.

11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள் இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு) ப் பரிசுத்தமானவர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமான படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.

11:79. (அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர். நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.

11:80. அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்க போதுமான) வலிமையுள்ள ஆதரவின் பால் நான் ஒதுங்க வேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார்.

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள் "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது. எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும் போதேஉம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியை தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்து கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?

11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்து விட்ட போது. நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.

11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன. (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.

அல்குர்ஆன்: சூரா-அல் ஹூது

26:165. "உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்டநோக்கோடு) நெருங்குகின்றீர்களா?

26:173. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.

அல்குர்ஆன்: சூரா- அஷ்ஷூஃரா