18:109. சமுத்திரத்திலுள்ள நீர் யாவும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை (எழுத) ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தச் சமுத்திரம் யாவும் செலவாகி விடும். அதைப்போல் இன்னொரு பங்கும் (சமுத்திரத்தைச்) சேர்த்துக்கொண்ட போதிலும் கூட என்று (நபியே!) நீர் கூறும்.
31:27. மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்"