39:53. "என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.
39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
39:56. "அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே"! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
39:57. அல்லது: "அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;
39:.58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:59. (பதில் கூறப்படும்) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்."
39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?
அல் குர்ஆன்: அல் ஜூமர் (கூட்டங்கள்)