22:5. மனிதர்களே! மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்: நாம் உங்களை மண்ணிலிருந்து, பிறகு இந்திரியத்திலிருந்து - பிறகு இரத்தக்கட்டியிலிருந்து - பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகதான் (இவற்றை நாம் எடுத்துரைக்கிறோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தைஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு உங்களைக் குழந்தை வடிவில் வெளிக் கொணர்கின்றோம்.
23:14. பிறகு, அந்த விந்தினை இரத்தக்கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர், அந்த இரத்தக்கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக் கட்டியை எழும்புகளாய் ஆக்கினோம். பின்னர், அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளர செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்.