Tuesday, April 19, 2005

உண்மையான கல்வி ஞானம் எது?


2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.

2:206. "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது; நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

22:3. இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.

22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழிகாட்டியோ, வேத(ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்து தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.

22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம (தீர்ப்பு) நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.

22:10. " உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்" (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்).