Thursday, November 25, 2004

துறவித்தனம் ஆகுமானதா?

57:26. அன்றியும், திடமாக நாமே (அல்லாஹ்வே) நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்) தூதர்களாக அனுப்பினோம்; இன்னும் அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.

57:27. பின்னர் அவர்களின் (அடிச்)சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (இயேசு) (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் (பைபிள்) கொடுத்தோம் - அன்றியும், அவரை பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும், கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக் கொண்டார்கள்): ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதை சரிவர பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.

அல்குர்ஆன்: அல் ஹதீத் (இரும்பு)