Monday, October 11, 2004

மர்யமும் (கன்னி மேரி) மகனும் (ஏசு) மனிதர்களே.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (வான தூதர்கள்) மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.
உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும்
உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக)
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் (என்றும்)

3:43. "மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜூது செய்தும் (சிர
வணக்கம்
) ருகூஃ செய்தும் (குனிந்து வணங்குதல்) வணக்கம்
செய்வீராக" (என்றும்) கூறினர்.

3:44. (நபியே (தூதரே) இவை(யெல்லாம்) மறைவானவற்றில்
நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம்
அறிவிக்கின்றோம். மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க
வேண்டுமென்பதைப் பற்றி (குறிபார்த்தறிய) தங்கள் எழுது
கோல்களை அவர்கல் எறிந்த போது நீர் அவர்களுடன்
இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர்
அவர்களுடன் இருக்கவில்லை.

3:45. மலக்குகள் (வான தூதர்கள்) கூறினார்கள் "மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக்
கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங்
கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா (ஏசு)
என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும்
கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில்
ஒருவராகவும் இருப்பார்.

3:46. "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்
போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர்
மக்களுடன் பேசுவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய)
சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."

3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார் "என் இறைவனே! என்னை ஒரு
மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்
உண்டாக முடியும்" (அதற்கு) அவன் கூறினான் "அப்படித்தான்
அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு
காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக'
எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."

3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும்,
தவ்ராத்தையும், இன்ஜீலையும், (இறைவனால் அருளப்பட்ட
குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள்
) கற்றுக் கொடுப்பான்.

4:172. வேதத்தையுடையோரே! நீங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து
செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர
(வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய
ஈஸா (ஏசு) அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் ("குன்"
ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால்
உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால்
போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர்
ஆன்மா தான்
. ஆகவே, அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள்
மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளுங்கள். இன்னும்,
(வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள்
- (இப்படி
கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களூக்கு
நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்
ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து
அவன் தூய்மையானவன்
. வானங்களிலும், பூமியிலும்
இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள்
அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே
போதுமானவன்.

அல் குர்ஆன்